Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 21 March 2018

​தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை டேப்லட் மூலம் பயிற்சி​


ஐயா,பார்த்து பண்ணுங்கய்யா'- விடைத்தாளில் ரூபாயை இணைத்து அனுப்பிய மாணவர்கள்


உத்தரப் பிரதேச மாநிலத்தில், 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விடைத்தாளில் பணத்தை வைத்து இணைத்து அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் என்றாலே பள்ளித் தேர்வுகளில் அடிக்கடி மாணவர்கள் பிட் அடித்து பிடிபடுவதும், மாணவர்களுக்கு பிட்களை பெற்றோர்களே கொடுப்பதும் போன்ற செய்திகளை அறிந்திருப்போம். ஆனால், இப்போது, விடைத்தாளில் பணத்தை வைத்து அதைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு கையூட்டு வழங்கும் கதையும் நடந்துள்ளது.

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதில் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இதில் பெரோசாபாத் மாவட்டத்தில் ஆக்ராவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலையில் கேள்வித்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, மாணவர்கள் தங்களின் விடைத்தாளில் ரூ.100, ரூ.50, ரூ.500 நோட்டுகளை இணைத்து தங்களை தேர்வில் பாஸ் செய்யக் கோரியுள்ளனர்.


இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ''தேர்வுகளை சரியாக எழுதாத மாணவர்கள், இதுபோன்று விடைத்தாளில் பணத்தை இணைத்து அனுப்புகிறார்கள். தங்களின் பணத்தை எடுத்துக்கொண்டு எப்படியாவது பாஸ்செய்யக்கோருகின்றனர்.

ஆனால், ஆசிரியர்களைப் பொறுத்தவரை விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண் அளிக்கிறோம், பணத்துக்காக அல்ல'' என்று தெரிவித்தார்.

தேர்வு எழுதும் அறைகளில் கண்காணிப்பு கேமிராக்கள் இருந்தபோதிலும், மாணவர்கள் இதுபோன்று செய்துள்ளார்கள். சிலநேரங்களில் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமிரா பழுதடைந்ததால் இதுபோல் நடந்திருக்கலாம் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இயற்பியல் ஆசிரியர் சம்பா சக்ரவர்த்தி கூறுகையில், ''நான் விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்தபோது, அதில் 100 ரூபாய் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த கேள்வித்தாள் மாணவருடையதா அல்லது மாணவி எழுதியதா எனத் தெரியவில்லை. ஆனால், இறுதியில் மாணவி ஒருவர் எழுதியது என்பது தெரியவந்தது.

அந்த விடைத்தாளில் தயவுசெய்து என்னை பாஸ் செய்துவிடுங்கள், இல்லாவிட்டால் எனது பெற்றோர்கள் எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். மற்றொரு மாணவர் என்னை நீங்கள் பாஸ் செய்யாவிட்டால், என்னுடைய பெற்றோர்கள் எனது படிப்பை நிறுத்திவிடுவார்கள் என தெரிவித்து பணம் வைத்திருந்தார். மாணவர்களைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் பணத்துக்காக மயங்கிவிடுவார்கள் என நினைக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்


தொடக்க நடுநிலப்பள்ளிகளில்- ஆண்டு விழா நடத்துதல்- மாணவர் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்குதல்- தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல் முறைகள் 21-03-2018தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு

அரசுப்பள்ளியில் வெகு சிறப்பாக நடந்த ஆண்டு விழா

அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி

தேர்வுக்குத் தயாரா? - கதைகளை வரிவிடாது வாசியுங்கள்! - ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் (10-ம் வகுப்பு)

இன்று உலக காடுகள் தினம்! – மார்ச் 21

பள்ளிகளில் உள்ள கரும்பலகையில் ஆசிரியர்கள் எவ்வாறு எழுத வேண்டும்- கல்வித்துறை அறிவுரை

Phoetic English - Unit 6 குறைந்தது 200 ஆங்கில வார்த்தைகளையாவது வாசிக்கும் திறன்

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு மார்ச் 25-ம் தேதி முதல் அகில இந்தியஒதுக்கீடு

கே.வி., பள்ளிகளுக்கு தரவரிசையா?

லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறைஇணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, 'பல்கலைகள், கல்லுாரிகளைப் போல, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் தரத்தின் அடிப்படையில் பட்டியலிடும் திட்டம் ஏதும் இல்லை' என்றார்.


பிளஸ் 2 இயற்பியலில் 'கிரியேட்டிவ்' கேள்விகளால் குழப்பம் : ஆசிரியர், மாணவர்கள் கருத்து

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் மூன்று கிரியேட்டிவ் ஒரு மதிப்பெண் வினாக்கள் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், மற்ற வினாக்கள் மிக எளிமை என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.

கே.காளீஸ்வரி, ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் வினாக்கள் 30ம் மிக எளிமை, ஒன்றிரண்டு வினாக்கள் சிந்தித்து பதில் அளிப்பதாக இருந்தன. அது குழப்பத்தை ஏற்படுத்தினாலும்சரியான பதில் எழுத முடிந்தது. மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக கேட்கப்பட்டிருந்தன.

 5 மதிப்பெண் கட்டாய வினாவும் எளிமை. சென்டம் வாய்ப்பு அதிகம்.ஏ.சினேக பிரித்தா, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்கள் 30ல் சில கடினமாக இருந்தன. மற்றபடி மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண், பத்து மதிப்பெண் வினாக்கள் எல்லாம் எளிமை தான்.ஒருமதிப்பெண் வினாக்கள் எழுத முடியாத நிலையில், சென்டம் வாய்ப்பு குறையும். ஐந்து மதிப்பெண் கட்டாய வினா எட்டாவது பாடத்தில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டு படித்தபடியே கேட்கப்பட்டிருந்தது.

எஸ்.நித்தீஷ்குமார், ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்களில் மட்டும் சற்று கடினமாக, கணக்கு போட்டு எழுதுவதாக கேட்கப்பட்டிருந்தன.மற்ற வினாக்கள் கடந்தாண்டுகளில் கேட்கப்பட்டது போல், திரும்ப திரும்ப பொதுத் தேர்வில் இடம்பெற்றதாகவே இருந்தன. இதனால், எளிமையாக இருந்தது.

எம்.சேக்அப்துல்லா, இயற்பியல் ஆசிரியர், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் கேள்விகளில், பி டைப்பில் வினா எண் 5, 9, 25 ஆகியவை சற்று கடினம். சிந்தித்து எழுத வேண்டியதாக இருந்தது. இதுவரை கேட்கப்படாத கேள்விகள்.

இருந்தாலும், முந்தைய ஆண்டுகளை விட எளிமை தான். ஒரு மார்க்கில் 15 வினாக்கள் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்தும், 10 வினாக்கள் பயிற்சியின் மூலம் செய்வதாகவும், 5 வினாக்கள் சிந்தித்து எழுதுவதாகவும் இருந்தன.


இயற்பியல், பொருளியலில் கேள்விகள் கடினம் : பிளஸ் 2 மாணவர்கள், 'சென்டம்' பெற முடியுமா?

பிளஸ் 2 இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், ஐந்து கேள்விகளை தவிர, மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தன என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரி வித்தனர். 

அதே நேரம், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறையும் என, கூறப்படுகிறது.பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் தேர்வும், வணிகவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடந்தது.

கையேடு : இதில், இயற்பியலில், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளே, வினாத்தாளில் அதிகமாக இடம் பெற்று இருந்தன. அதேபோல், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச கற்றல் கையேடு என்ற புத்தகத்தில் இருந்தும், 65 சதவீத கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பொருளியல் தேர்வில், பிரிவு, 'அ' வைதவிர, மற்ற அனைத்து பிரிவுகளிலும், எளிமையான வினாக்கள் இருந்தன. பிரிவு, 'அ' வில், ஒரு மதிப்பெண் கேள்விகள், மாணவர்களை நீண்ட நேரம் யோசிக்க வைத்தன. இதனால், அப்பிரிவில், ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியவில்லை என்றனர்.பொருளியல் தேர்வு குறித்து, சென்னையில் உள்ள, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி, பொருளியல் ஆசிரியர், ஏ.பி.பழனி கூறியதாவது:கல்வித்துறை, 'ப்ளூ பிரின்ட்'டில் இருந்து, மாறாமல் வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது.

சோதனை : ஒன்று, 10, 11, 13 மற்றும், 14வது கேள்விகள், மாணவர்களின் சிந்தனைத் திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. தேர்வு விதிகளின்படி, விடை திருத்தத்தில், 'சென்டம்' வழங்கும் முன், மாணவர்களின் கல்வித்தரத்தை சோதிக்க, சில சிக்கலான கேள்விகள் இடம் பெறும்.அதேபோல, சில, 'டுவிஸ்ட்' கேள்விகள் இருந்தன. மேலும், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளும், அதிகமாக இடம் பெற்றதால், மாணவர்களின் தேர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

முதல் கேள்விக்கு, 'இரண்டு' விடைபொருளியல் தேர்வில், ஒன்றாம் எண்ணில் இடம் பெற்ற, 'பொருளியல் குறிப்பிடுவது...' என்ற, ஒரு மதிப்பெண் கேள்விக்கு, சரியான விடையை கண்டுபிடிக்க, நான்கு குறிப்புகள் தரப்பட்டிருந்தன. அவற்றில், மனித விருப்பமும், நிறைவடைதலும் என்ற குறிப்பும், செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு என்ற குறிப்பும், சரியான விடையாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர். எனவே, இந்தஇரண்டில், எந்த பதிலை எழுதினாலும், மதிப்பெண் தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

காப்பியடித்த 44 பேர் சிக்கினர் :

இயற்பியல் மற்றும்பொருளியல் தேர்வில், காப்பி அடித்ததாக, நேற்று மாநிலம் முழுவதும், 44 பேர் சிக்கினர். இதில், மதுரை, 5; கோவை, 3; கிருஷ்ணகிரி, 1; திருச்சி, 4; விழுப்புரம், 8; திருவண்ணாமலையில், 5 பேர் என, 26 பேர் பிடிபட்டனர். வேலுார், 3; திருவண்ணாமலை, 11; விழுப்புரம், 3; மதுரையில், 1 என, 18 தனித்தேர்வர்கள் உட்பட, மொத்தம், 44 பேர் காப்பியடித்து, சிக்கினர். இந்த ஆண்டு, இதுவரை நடந்த தேர்வுகளில், நேற்று தான் அதிக மாணவர்கள் காப்பியடித்து சிக்கியுள்ளனர்.


பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து


தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு இந்த வருடம் முதல் முதலாக அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது. 
காப்பி அடித்ததாக கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு மாணவர் பிடிபட்டார்.இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். எந்த கேள்வியும் புரியாமல் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. சிலர் கண்ணீருடன் தேர்வு அறையில் இருந்து வந்ததை பார்க்க முடிந்தது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது.வினாத்தாளை வாங்கி படித்து பார்த்த போது முதலில் அது மாறி வந்துவிட்டதோ என்று எண்ணினோம். காரணம் கேட்கப்பட்ட சில கேள்விகள் மட்டுமே நேரடியாக பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. மற்ற கேள்விகள் அனைத்தும் மிகவும் கடினம்.சி.பி.எஸ்.இ. தேர்வில் கேட்பது போல கேள்விகள் இருந்தன. இதனால் இந்த தேர்வில் பலர் தேர்ச்சி பெறுவது சந்தேகம்தான். எனவே எங்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்வு குறித்து அரசு பள்ளி கணித ஆசிரியர் ஒருவர் கூறியதாவது.கணித ஆசிரியர் என்ற முறையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு கணிதத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சரிதான். பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நேரடியாக கேள்விகளை கேட்காததால் மாணவர்களுக்கு புரியவில்லை. தமிழக அரசு கணித பாடத்துக்கு ஒரு புத்தகம் கொடுத்துள்ளது. அதைத்தான் நாங்கள் நடத்துகிறோம். புத்தகங்களை படித்து பார்த்து அதை சுயமாக சிந்தித்து எழுத மாணவர்களுக்கு நேரம் கிடையாது. அதே போல கற்பிக்க எங்களுக்கும் நாட்கள் போதாது.சி.பி.எஸ்.இ.க்கு பாடத்திட்டம் குறைவு. ஆழமாக படிப்பார்கள். தமிழக பாடத்திட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் அதை அப்படியே படிக்கின்றனர். மாணவர்களுக்கு 6-ம் வகுப்பில் இருந்தே சிந்திக்கும் ஆற்றல் கொண்ட கேள்விகளை கேட்க வேண்டும். அவ்வாறு படிப்படியாக கேட்பதன் மூலம் பிளஸ்-1 மாணவர்கள் சுயமாகசிந்தித்து தேர்வு எழுதும் திறனை பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ்-1 விலங்கியல் தேர்வும் நேற்று நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், தேர்வில் பல வினாக்கள் எளிதாக தான் இருந்தன. ஆனால் 5 மதிப்பெண் கேள்விகளில் சில, பாடத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படவில்லை. இதனால் சற்று கடினமாக இருந்தது என்றனர்.


போராட்டத்தை கைவிட்ட மாற்று திறனாளிகள்

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாற்று திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, குறித்த விபரங்களை மாற்றுத்திறனாளிகள் சங்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டது.

உரிய பதில் கிடைக்கவில்லை. இதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, சங்கம் அறிவித்தது.இந்நிலையில், சங்கத்துடன், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் நரேஷ், போலீசார் முன்னிலையில் பேச்சு நடத்தினார். இதில், சங்கத்தினர் கோரிய புள்ளி விவரங்கள் வழங்குவதாக ஒப்புக் கொண்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.


நீட் தேர்வுப் பயிற்சிக்குப் புதிய செயலி!


சென்னையில் நீட் தேர்வுப் பயிற்சிக்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி மையங்களை அரசு நடத்திவருகிறது. அது போன்று, தனியார் பயிற்சி மையங்களும் செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் ராம் பிரகாஷ், காணொளி மூலம் நீட் தேர்வுப் பயிற்சிக்கான புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளார். அரசு நீட் பயிற்சி வகுப்புகளை நடத்திவந்தாலும், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு சரியாகக் கிடைப்பதில்லை.

ஆனால், அனைத்துப் பகுதிகளிலும் தனியார் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. அங்கே சேருவதற்கான விண்ணப்பத்தை ரூ.1400 கொடுத்து வாங்க முடியாத பொருளாதார நெருக்கடியில்தான் அதிக மாணவர்கள் உள்ளனர்.

அதனால், அனைத்து மாணவர்களும் எளிதில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற LETS ACT என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறோம்; அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார் ராம் பிரகாஷ்


இந்த (2018-2019) பட்ஜெட்டிலாவது கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்குமா தமிழக அரசு?

தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தான் பணிபுரியும் பள்ளியில் உள்ளூர் விடுமுறை விடப்படும் நாளன்று பணியிடைப் பயிற்சியில் பங்கேற்க நேரிடின், அன்னார் அப்பயிற்சி பெற்ற நாளை ஈடு செய் விடுப்பாக துய்க்க முடியுமா? RTI மூலம் பெறப்பட்ட தகவல்!!!

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!