Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 20 July 2018

அடுத்த 4 ஆண்டுகளில் தேசிய போட்டி தேர்வில் தமிழக மாணவர்கள்: உதயச்சந்திரன்


சேலம் மாவட்டம் ஓமலூரில்,
புதிய பாடத் திட்டம் குறித்து, கருத்தாளர்களுக்கு நடந்த ஆலோசனைக் கூட்டம், பள்ளி கல்வித்துறை அரசு செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது அவர் பேசியதாவது: பாட புத்தகங்களை எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து தயாரிப்பர். இந்த முறை அவை மாற்றப்பட்டு, பாடப்புத்தகம் எழுதுவதை, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. இந்திய அளவில் கல்வியாளர்கள், நிர்வாக அதிகாரிகள், பல மாநில கருத்தாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், என்.ஜி.ஓ.,க்கள், ஓவியர்கள் உள்ளிட்ட பலருடைய ஆலோசனைகள், கருத்துகளை உள்வாங்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் எட்டுவரை பயிலும் மாணவர்கள், எதில் வலிமையாக உள்ளனர், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை பல்வேறு வடிவில் ஆராய்ந்து, புதிய பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வரை படங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதால், அதிக பக்கங்கள் கொண்டதாக உள்ளது. நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்வி கேட்கப்படுகிறது. அதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது.
அதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டனர். பிளஸ் 1 பாட புத்தகத்தில், முன்னுரைக்கு பின், அனைத்து பாட பிரிவினருக்கும், மேல்படிப்பு பற்றி என்ன, எங்கு படிக்கலாம் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தொழில்நுட்பம் பதிந்துள்ளது. 2.825 க்யூ.ஆர்.கோடு நமது புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பி.பி.சி., வீடியோ காட்சிகள் இணைப்பு செய்யப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு நாளைக்கு, க்யூ,ஆர்.கோடு மூலம், இரண்டு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களோடு கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள் அகில இந்திய போட்டி தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது ஆசிரியர்கள் கையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி இணை இயக்குனர் பொன்.குமார், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்

புதிய பாடப்புத்தகத்தில், எந்தப் பாடத்திலும் உள்ள QR Code video தயாரிப்பிற்கு தொடர்பு கொள்ள

கனவு ஆசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு கிராம பொதுமக்கள் பாராட்டு விழா

Flash News : BE - ஆகஸ்ட் 31 வரை கவுன்சிலிங் நடத்தலாம்!

Flash News : தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க கோரிய உத்தரவுக்கு தடை.

"ஆலமரத்துல விளையாட்டு" என்ற பாடலுக்கு நடனமாடி சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை

PRIMARY ICT-Benefits of QR code-Diksha Vs QR code scanner

வாட்ஸ் ஆப்பில் இனி ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்யும் வகையில் கட்டுப்பாடு???

1 to 5th std - Learning Indicators ( All Subjects )

வகுப்புவாரியாக தொடக்க வகுப்பு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்:

Click here to read more

பள்ளி ஆண்டாய்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: 20-07-2018

G.O -126,127,128,129 - DEE & DSE Special Rules

அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன்

ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி

BE - 3ம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் துவக்கம்

IGNOU - படிப்பில் சேர கூடுதல் அவகாசம்!

பி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு

Youtube #hastag - விரைவில் வருகிறது

CBSE - பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு - "என்னுடன் வா ஆட்டம்" - 8 (20.07.2018)

பி.எஃப். ஓய்வூதியதாரர்களுக்கு முழு ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும்

மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் அறிவியல் மையம்

ஆய்வு அலுவலர்கள் பள்ளிக்கு வருகை புரியும் போது தலைமையாசிரியரால் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய பதிவேடுகளின் விபரம்!!!

TNPSC - ‘ஆன்லைன்’ தேர்வு அடுத்த நிலைக்கு உயர்கிறது!

அ, ஆ, இ, ஈ.... ஆடலுடன் பாடல் பாடும் அரசுப்பள்ளி மாணவர்கள்

வரலாற்றில் இன்று 20.07.2018

'அனைவரும் தேர்ச்சி' திட்டத்தை, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் ரத்து செய்யும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றம்! -அனைவரும் தேர்ச்சி திட்டத்தை பின்பற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து, மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம்.

இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொழுப்புக்களை எளிதில் கரைக்கும் இயற்கை பானம்!

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!