Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 3 August 2018

A to Z எழுத்துகளின் உச்சரிப்பு முறைகள் காணொளி

The First 100 Frequency Words for Primary Students - VideoDEE - கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்பணியிடம் "வட்டாரக் கல்வி அலுவலர்"என தெரிவிக்கப்படுகிறது அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது - இயக்குனர் செயல்முறைகள்!!உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு மீண்டும் சனி அல்லது திங்கள் நடைபெறும்!

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு மீண்டும் சனி அல்லது திங்கள் நடைபெறும்!

Click here to read more

அரசாணை 518-ன் படி டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பப்படிவம்-NO WATERMARK PDF FILE

அரசாணை 518-ன் படி டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பப்படிவம்-NO WATERMARK PDF FILE

Click here to download Form


ஆனந்தம் கொண்டு வரும் ஆடி 18ம் பெருக்கு!!


ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ஆம் நாளை குறிக்கிறது. இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.

முன்னோர் காலத்தில் தமிழக ஆறுகள் ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து ஓடும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.


இந்த ஆடி காலத்தில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.

கரு கொண்ட பூமி தாய்க்கு, நிலமும் நீரும் சேர்ந்த இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தானிய அபிவிருத்தி அருளும் அம்பிகையை, பெண்கள் - வம்ச அபிவிருத்தி வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்து, இல்லறம் நல்லறமாக விளங்க அம்பிகையை வேண்டிக்கொண்டு, மஞ்சள் கயிறு அணிவிப்பார்கள்.

தமிழகத்தில் காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆடி பதினெட்டாம் பெருக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி-வேலூர், குளித்தலை, திருச்சி, பூம்புகார் ஆகிய இடங்களிலும், ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 03-08-2018

பள்ளிள காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.

உரை: ஐந்து புலன்கள...

Click here to read more

கற்றலில் குறைபாடு: பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கற்றலில் குறைபாடு: பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Click here to read more

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-20 "ஓடி எறியும் ஆட்டம்" (03.08.2018)

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-20 "ஓடி எறியும் ஆட்டம்" (03.08.2018)

Click here to read more

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 3


வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 3

Click here to read more

பள்ளிக் கல்வித் துறையில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: விருப்ப கலந்தாய்வுக்கு உத்தரவு

ஆசிரியர் அல்லாத பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலகங்களில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிவோருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து வகைப் பணியாளர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்படத் தக்க வகையிலும், அனைத்து அலுவலகங்களும் எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 1.8.2018 அன்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோருக்கு (இளநிலை உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரை) ஆக.4-ஆம் தேதி மாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி இட மாறுதல் வழங்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நடைமுறைகளைப் பின்பற்றி...: இந்த மாறுதல் கலந்தாய்வு எந்தவிதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில் பணியாளர்களைப் பெரிதும் பாதிக்காத வகையில் நடத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே மாறுதல் வழங்க வேண்டும். இடமாறுதலுக்கு சில நடைமுறைகளைப் பின்பற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோரை...: தற்போதுள்ள பதவியில் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோரை வேறு அலுவலகத்துக்கு கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது.
அரசாணையின்படி மாவட்டக் கல்வி அலுவலகம் புதிதாக வேறு இடத்துக்கு பணியாளர்களுடன் மாற்றப்பட்டிருப்பின் அந்த அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு மாறுதல் வழங்கத் தேவையில்லை. எனினும், நிர்வாகக் காரணங்களால் பணியிடத்துடன் மாற்றம் பெற்ற பணியாளர்கள் மாறுதல் கோரினால் அவர்களையும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
தற்போதுள்ள பதவியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் எவருக்கும் மாறுதல் அளிக்காமல் இருக்கக் கூடாது என அதில் கூறியுள்ளார்.
இடமாறுதலுக்கு வரவேற்பு: இது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அதிகமான் முத்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமைச் செயலகத்திலும் பிற துறைகளிலும் நடைமுறையில் உள்ளது போல் 3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களை பள்ளிக் கல்வித் துறை நிர்வாக நலன் கருதி மாறுதல்கள் வழங்க வேண்டும் என அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது; தற்போது அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார்.

கல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தரமாக்க ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வியில் நெறிமுறை பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மைய நூலகங்களில், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. வரும் கல்வியாண்டில் 30 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.  இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் அவர் அளித்த பேட்டியில், ``பட்டய கணக்காளர்கள் ் அதிகளவில் தேவைப்படுவதால், அந்த படிப்பை ஊக்குவிக்கும் வகையில், பிளஸ்-2 வணிகவியல் படிக்கும் மாணவர்களில், சிஏ நுழைவுத் தேர்வுக்காக வரும் ஆண்டில்  25 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பட்டய கணக்காளர்கள் எனப்படும் தணிக்கையாளர்கள் தேர்வுக்காக அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள், நடப்பு  ஆண்டிலேயே தேர்வு செய்து 10 நாட்கள்  பயிற்சி அளிக்கப்படும். தமிழக கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிப்பது குறித்து பணியாளர் நல துறையுடன் அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து விரைவில் நல்ல  அறிவிப்பு வெளியாகும்’’ என்று கூறினார்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!