Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 5 August 2018

அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு இரவோடு, இரவாக நியமன உத்தரவு -கலெக்டரின் அதிரடி நடவடிக்கை


அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு இரவோடு, இரவாக நியமன உத்தரவு -கலெக்டரின் அதிரடி நடவடிக்கை

Click here to read more

English Simple TLM- Video

English Simple TLM- Video

Click here to watch video


இந்தியாவின் வரைபடத்தை வித்தியாசமான முறையில் சுலபமாக வரைய கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்

இந்தியாவின் வரைபடத்தை வித்தியாசமான முறையில்  சுலபமாக வரைய கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்

Click here to watch video


GPF INTEREST RATE (Rate of Interest from 1980-2017)

ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான யுஐடிஏஐ எண்ணை நீக்குவது எப்படி?

உங்களது ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான ஆதார் ஆணையத்தின் (யுஐடிஏஐ)  தொலைபேசி எண்ணை நீக்குவது வெகு எளிது. உலக அளவில் மிகவும் பிரபலமான இணையதள தேடுபொறி நிறுவனம் கூகுள்.

பல்வேறு சேவைகளை வழங்கும் கூகுள், ஸ்மார்ட் ஃபோன்களுக்கான ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை  அளித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் தனிநபர் அடையாள ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் என்ற 11 இலக்க எண் திடீரென தானாகவே பதிவானது.

இதுகுறித்து விளக்கமளித்த ஆதார் அடையாள ஆணையம், தங்களது எண் 1947 என்றும், சில விஷமிகள் மக்களைக் குழப்புவதற்காக வேறு ஒரு எண்ணை ஆதார் அடையாள ஆணையத்தின் கட்டணமில்லா எண் என்று பரப்புகின்றனர் என்று கூறியிருந்தது.இந்த தவறுக்கு தாங்கள் காரணம் இல்லை என தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் மறுப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று விளக்கமளித்த கூகுள், இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்ஃபோன்களுக்காக 2014-ம் ஆண்டு வழங்கிய ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தவறுதலாக அந்த எண் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தது. இதனால், பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு வருந்துவதாக தெரிவித்த கூகுள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தாங்களாகவே அந்த எண்ணை அழித்துவிடலாம் என்றும் தெரிவித்தது.எண்ணை நீக்குவது எப்படி?ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான யுஐடிஏஐ தொலைபேசி எண்ணை நீக்குவது வெகு எளிதாகும்.ஸ்மார்ட்ஃபோன்களில் கான்டாக்ட்ஸ் பகுதியில் பதிவாகியுள்ள பிற எண்களை வழக்கமாக எவ்வாறு நாம் டெலீட் செய்வோமோ, அதே பாணியில் யுஐடிஏஐ தொலைபேசி எண்ணை டெலீட் செய்ய முடியும். ஒரு நபர் ஒரே கூகுள் அக்கவுண்டின் கீழ் கூடுதல் தொலைபேசிகளையும் இணைத்திருந்தால், அந்த தொலைபேசிகளில் பதிவாகியுள்ள யுஐடிஏஐ தொலைபேசி எண்களையும் டெலீட் செய்ய வேண்டும்.அவை டெலீட் செய்யப்பட்டுவிட்டனவா? என்பதை ஒன்றுக்கு 2 முறை செக் செய்து கொள்ளவும். இவ்வாறு டெலீட் செய்வதால், ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவாகியுள்ள பிற தகவல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த, முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, 9ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' முடிவு செய்துள்ளது.

 ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மோசஸ், தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, விரைவில் பூரண நலம் பெற, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து, முதல்வர் பழனிசாமி பேசியதற்கு, கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முதல்வரின் பேச்சை கண்டித்து, 9ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்,கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஜெயகுமார் மீது, அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், 16ல், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கண்டனஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர், 4ல், ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்; அக்., 13ல், சேலத்தில் வேலைநிறுத்த போராட்ட மாநாடு; நவ., 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டம் முடிந்த பின், முதல்வர் பேச்சை கண்டித்து, கண்டன அறிக்கையையும், கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம்

தொடக்கப் பள்ளிகளில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை முடிப்பது குறித்து ஆலோசிக்க, முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில் நடைபெற உள்ளது.

 தமிழக அரசின், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், உள் கட்டமைப்பு மேம்பாடு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, 'எமிஸ்' என்ற, மாணவர் விபரங்களை டிஜிட்டல் தொகுப்பில் சேர்ப்பது என, பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல, ஆசிரியர்களின் நியமனம், பதவி உயர்வு குறித்த பிரச்னைகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான நிர்வாக பணிகள் போன்றவற்றிலும், பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.இந்தப் பணிகளின் நிலைமை என்ன; அவற்றின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, சி.இ.ஓ.,க்கள் மற்றும் டி.இ.ஓ.,க்களுக்கு, சென்னையில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

இதற்கான கூட்டம், வரும், 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் நடக்கும் என, தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இந்தக் கூட்டத்திற்கு வரும் முன், தங்கள் மாவட்ட, பள்ளிகளின் வழக்குகள் நிலை, பள்ளி வாரியாக ஆசிரியர் காலியிட விபரம், உள்பட, 29 வகை பட்டியல்களை, வரும், 6ம் தேதிக்குள், deemeetingagenda@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!