Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 21 September 2019

எல்லோரும் படிக்கனும் எல்லோரும் படிக்கனும் -கவிதை க. சத்தியா தேவி ஆசிரியை




எத்தனையோ முயற்சிகள்
எத்தனையோ யுக்திகள் .

படிக்க வைத்து
தேர்வு வைத்து
திருத்த திருத்த தெரிகிறது
உழைப்பெல்லாம் வீண் என்று .

சொன்னதை செய்யவில்லை
என சுட்டிக்காட்டி அறிவுரை கூற
அதற்கும் இரண்டு பாடவேளை
பாழடித்து..

பெற்றோரை அழைத்து
பேசலாம் என
முன்னேற்ற அட்டையுடன்
ஏற்பாடு செய்து

ஒவ்வொரு பெற்றோரையும்
சந்திக்கும்போது தெரிகிறது
மாணவர் வாழ்க்கை
 கொடுமை என்று .

சந்திரனின் அம்மாவுக்கு
பல கால வயிற்று வலி
அப்பா தண்ணீரில் மிதந்து
இவன் கண்ணீரில் மிதக்கிறான்.

சோறு மட்டும்
ஆயா போடுவார்,
இது அவன்
சித்தி சொன்னது.

மோகனா முதல் மதிப்பெண்
ஓ .. அவளுக்கு மகிழ்ச்சி சூழல் போல
அதனால்தான் படிக்கிறாளோ?
இல்லை இல்லை
அப்பா விட்டுப் போய்
பத்து ஆண்டு ஆயிற்று
வீட்டு வேலை செய்கிறேன் என்றார்
மோகனாவின் அம்மா.

அடங்காத அகராதி சங்கர்
மதிப்பெண் கொஞ்சம் பெறுவான்
அப்பா இறந்து
மறுமணம் புரிந்த அம்மா,
மறைத்து மறைத்து
வேண்டியதை வாங்கி தருகிறார்.
தினமும் சத்துணவிலாவது
சாப்பிடுகிறாயா இல்லையா
என இப்பொழுது தான் வினவுகிறாள்

திவாகர் படிப்பான்
ஆனாலும் சோகமாகதான் இருப்பான்
சைக்கிள் மதித்து வேகா வெய்யிலில்
வந்த அப்பா
காலை 6 வரை படிக்கிறான்
அப்புறம் பால் பாக்கெட் போடுறான் என்றார்

அரசுப் பள்ளி
அசிரியர் என்பதால்
எத்தனையோ விமர்சனங்கள்
எத்தனையோ கேவலங்கல்
அத்தனையும் சந்தித்து
அமைதியாக இருக்கிறோம்.

வெறும் சம்பளம் மட்டும்
எங்கள் வாழ்க்கை அல்ல
ஒவ்வோர் மாணவனும்
எங்கள் சவால்கள்
மனிதாபிமானம்
எங்களுக்கு உண்டு
மனசாட்சியும்
எங்களுக்கு உண்டு.

எல்லோரும் படிக்கனும்
எல்லோரும் படிக்கனும்
என்றென்றும் முயற்சிகள்
புதுப்புது யுக்திகள் தினம் தொடர்வோம்

க. சத்தியா தேவி
ஆசிரியை

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

2 comments:

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!